பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு

458 Views

தமிழீழ விடுதலைப் போரின் யதார்த்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் படமாக வெளி வந்துள்ள மேதகு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மிகவும் தரமிக்க படமாக தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ள இந்த திரைப் படத்தை உலக நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதுடன், அதனை மிகப் பெரும் பொருளாதார வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றும் தமிழ் மக்களுக்கு உண்டு.

அதுவே கலைஞர்களையும், படைப்பாளிகளையும் எமது வரலாற்றின் உண்மையான படைப்புக்களை நோக்கி நகர்த்தும் என்பதுடன், பொய்யான வரலாறுகளை தாங்கி வெளிவரும் படங்களையும் முறியடிப்பதுடன், அவற்றை படைப்பாளிகள் புறக்கணிக்கும் நிலையைiயும் ஏற்படுத்தும்.France Methagu பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு

எனவே பிரான்ஸ் இல் வெளியிடப்படும் மேதகு படத்திற்கு தமிழ் மக்கள் தமது ஆதரவுகளை வழங்குவது மிகவும் அவசியமானது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137
ilakku Weekly Epaper 137 July 04 2021 பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு

Leave a Reply