காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP)  மற்றும் புனர்வாழ்வு பணியகம் (BOR) ஆகியவற்றிற்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்று இன்று (25) வியாழக்கிழமை இராஜகிரியவில் உள்ள காணாமல் போனோர் பற்றிய  அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையிலான தகவல் பகிர்வு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.