மயிலத்தமடு – மாதவனை பிரச்சினை : அரசாங்கம் விரைந்து தீர்வு வழங்கவேண்டும் – சாணக்கியன்

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்ட நிலங்களை மீளமைப்பதற்கும், மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களுக்குப் போதுமான மேய்ச்சல் நிலங்களை நிரந்தரமாக எல்லை நிர்ணயம் செய்து வர்த்தமானியில் அறிவிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் செயற்படுகிறார்கள். பாற்பண்ணையாளர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவான தீர்வினை உறுதியாக வழங்கவேண்டும்  சாணக்கியன்  வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த விவசாயம் மற்றும் கால்நடை, நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் உண்மையே, எதனையும் நிராகரிக்கவில்லை என்றார்.