வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று புதன்கிழமை (23) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.



