வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து: கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (20-01-2022) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பகுதியில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டு குறித்த தீ விபத்து கரைச்சி பிரதேச சபையில் தீயணைப்பு பிரிவினர் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தின் போது நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டதால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீயால் பல மருத்துவமனை சாதனங்களும் மருத்துவ உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன என்பதுடன் இதுவரை சேத விபரம் தொடர்பில் எந்த மதிப்பீடும் தெரிவிக்கப்படவில்லை.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப் படவில்லை என்பதுடன், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற் கொண்டு வரும் கிளிநொச்சி காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.