ஜனாதிபதியின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது – இம்ரான்

யானை விழுங்கிய விளாம்பழம்

ஜனாதிபதியின்  உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது” என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். 

நாடாளுமன்ற விவாதத்தில்  உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்,

நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையில் ஏன் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் என்பதை தெளிவு படுத்துவார் என எதிர்பார்த்தால், அவர் தனது பழையே கதைகளையே மீண்டும் கூறியுள்ளார். அவரின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றே இருந்தது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.

Tamil News