மன்னார் – சந்தைப்படுத்தல் வாய்ப்பு இல்லாததால் கற்றாழைச் செய்கை பாதிப்பு

185902975 312758760326466 6037428606712004193 n மன்னார் - சந்தைப்படுத்தல் வாய்ப்பு இல்லாததால் கற்றாழைச் செய்கை பாதிப்பு

மன்னாரில் உரிய சந்தைப்படுத்தல் வாய்ப்பில்லாததால் கற்றாழை மூலிகை செடி செய்கை கைவிடப்பட்டுள்ளதாக மூலிகை செய்கையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மன்னார் நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட நறுவிலிக் குளம் கிராமத்தில் வீட்டுத் தோட்டங்களாக ஏராளமான கற்றாழை செடிகள் பயிரிடப்பட்டு பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

இது தொடர்பாக கற்றாழை செய்கையாளர்களிடம் கேட்ட  போது,

மன்னார் நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட நறுவிலிக் குளம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கற்றாழை மூலிகை செடியை தோட்ட பயிற்செய்கையாக வளர்த்து வந்தோம்.

கற்றாழை மூலிகை செடியை பாதுகாத்து வளர்ப்பதற்கு செலவுகள் அதிகம். அதற்கு உரிய வருமானமும் சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லாமையினால் மனச் சோர்வடைந்து தற்போது அதனை கைவிட்டு உள்ளோம்.

நாங்கள் உற்பத்தி செய்யும் கற்றாழை மூலிகைச் செடிகளை விற்பனை செய்து சந்தைப்படுத்தல் நிலையை உருவாக்கி தரும் பட்சத்தில நமது பாரம்பரிய மூலிகைச் செடியாக உள்ள இந்த கற்றாழை செடி அழிந்து விடாமல் தொடர்ச்சியாக உற்பத்தி செய்து பாதுகாக்க முடியும்.

மேலும் 40 நோய்களுக்கு மேல் குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் மூலிகையாக இருக்கும் இந்த கற்றாழைச் செடியை மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்து பாதுகாப்பதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்து எம் போன்ற பலருக்கு ஊக்குவிப்பு செய்வதன் மூலம் இந்த கற்றாழை செடியை ஒரு வாழ்வாதாரமாக அனைத்து குடும்பங்களின் தோட்டங்களிலும் உற்பத்தி செய்யும் முறைமையை ஏற்படுத்தலாம்” என்று தெரிவித்தனர்.