பஸில் பாராளுமன்றம் செல்வது தாமதமாகும்; ஜூலை நடுப்பகுதியிலேயே எம்.பி.யாவார்

mahinda gota basil 600 பஸில் பாராளுமன்றம் செல்வது தாமதமாகும்; ஜூலை நடுப்பகுதியிலேயே எம்.பி.யாவார்சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ஷவின் பாராளுமன்ற வருகை பிற்போகக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங் கட்சி எம்.பியொருவர் பதவி துறக்க வேண்டும். அதன் பின்னர் பஸிலின் பெயர் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட வேண்டும்.

இவ்வாறான நடை முறைகளால் ஜூலை நடுப் பகுதியிலேயே பஸில் பாராளுமன்றம் வரக்கூடும் என ஆளுங் கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை, ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, பஸில் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, சஷீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பஸில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சம்பந்தமாகவே இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.