மன்னார் சுகாதார தொண்டர்கள் போராட்டம்

IMG 20210719 110957 மன்னார் சுகாதார தொண்டர்கள் போராட்டம்

வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு வைத்திய சாலைகள் மேலதிக நேர கொடுப் பனவுகளை முழுமையாக வழங்கும் பொழுது மன்னார் வைத்திய சாலை மட்டும் எமக்கு ஓரவஞ்சனை செய்வது ஏன்? என சுகாதார தொண்டர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.

மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் மேலதிக நேர கொடுப் பனவுகளை உரிய முறையில் வழங்கக் கோரி சுகாதார தொண்டர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப் பட்டது.

இது தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது, வைத்தியர்கள் தாதியர்கள் போலவே நாங்களும் இரவு பகல் பாராது சேவை செய்கிறோம். எமக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப் படுவது இல்லை.

மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் பணி புரிகின்ற எமக்கு கடந்த  2020 ஆம் ஆண்டு செப்டம்பர், நவம்பர் மாதமும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் போன்ற நான்கு மாதங்கள் எங்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவை மட்டுப் படுத்தி 60 மணித்தியாலங்கள் மாத்திரமே வழங்கியிருந்தார்கள்.

60 மணித்தியாலங் களுக்கு மேலாக எமது பணியாளர்கள் மேற் கொண்ட மேலதிக கொடுப்பனவை இதுவரை காலமும் எங்களுக்கு வழங்க வில்லை. இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் எழுத்து மூலமாகவும் தொழிற் சங்க அடிப்படையிலும்  பணியாளர்கள் ஒன்றிணைந்தும்  எமது பணிப்பாளர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண ஆளுநர் போன்றவர் களுக்கு எமக்கு அநீதி இழைக்கப் படுவதாக தெரியப் படுத்தி இருந்தோம். அதற்கு எந்த விதமான தீர்மானங்களோ அல்லது சாதகமான முடிவுகளோ எழுத்து மூலமாகவோ அல்லது செயற்பாட்டு மூலமாக  அறிவிக்க வில்லை.

நாங்கள் 250 மணித்தி யாலங்களுக்கு மேல் வேலை செய்து கொண்டிருக் கின்றோம். அதனை மட்டுப் படுத்தி  80 மணித்தியா லங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப் படும் என்று எழுத்து மூலம் தெரிவித்திருக் கின்றார்கள் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது வைத்திய சாலையை போன்று தான், வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு வைத்திய சாலைகள். அங்கு பணி புரிகின்ற பணியாளர்களுக்கு முழுமையான கொடுப் பனவுகளை ஒவ்வொரு மாதமும் முழுமையாக வழங்கியிருக் கின்றார்கள். எங்களுக்கு மட்டும் 80 மணித்தியாலம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம். இது தொடர்பாக ஒவ்வொரு மேலிடங்களிலும் நாங்கள் கேள்வி கேட்டிருக்கிறோம்  ஆனால் பதில் இல்லை.

இந்த நேரத்தில் நாங்கள் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகின்றோம் நாங்கள் செய்த மேலதிக நேர கொடுப்பனவை முழுமையாக எங்களுக்கு வழங்குங்கள் அவ்வாறு வழங்காமல் எமக்கு சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடை பெறும்” என்றனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021