தமிழ் மரபில் வழிபாடு இடம்பெறும் மண்டூர் கந்தசுவாமி ஆலயம்

 

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பண்டைய தமிழர் மரபியல் முறையின் படி நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது.இவ்வாலயம் கி.மு. 1800 க்கு முற்­பட்­டது எனவும் கொள்­ளப்­ப­டு­கின்­றது.

நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது.

முன்னதாக போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் புவனராஜினால் திருவிழா அறிவிப்பு நிர்வாகத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய உட்பகுதியில் கொடியேற்றப்பட்டு வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது.IMG 0540 தமிழ் மரபில் வழிபாடு இடம்பெறும் மண்டூர் கந்தசுவாமி ஆலயம்

21 தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

தங்கவேல் கொண்டுள்ள பேழை அலங்கரிக்கப்பட்டு அதற்கு தினமும் பூஜைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,ஆலய உள் வீதி வெளி வீதியுலா இடம்பெறவுள்ளதுடன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கும் பேழை கொண்டுசெல்லப்பட்டு விசேட வழிபாடுகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.IMG 0468 1 தமிழ் மரபில் வழிபாடு இடம்பெறும் மண்டூர் கந்தசுவாமி ஆலயம்

இருபத்தொரு நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவம், எதிர்வரும் 02 ஆம் திகதி மட்டக்களப்பு வாவியில் முருகப்பெருமானுக்கான தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது