தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா!

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘அவருக்கு தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகின்றது’ என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். ‘அவரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது’ என்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.