போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை தொடருந்திலேயே பயணம் செய்யும் சாத்தியம் உருவாகியுள்ளது. இதுவே உலகின் ஆக நீண்ட தொடர் தொடருந்துப் பயணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த தொடருந்துப் பாதை 18,755 கிலோமீட்டர் நீளமானதாக இருக்கும். போர்ச்சுகலிலிருந்து சிங்கப்பூர் வரை செல்ல 21 நாள்கள் பிடிக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
போர்ச்சுகலின் தெற்கில் உள்ள லாகோசில் தொடங்கி, பாரிஸ், மாஸ்கோ, பெய்ஜிங், வியென்டியென், பேங்காக் என பல இடங்களைக் கடந்து இந்த தொடருந்துப் சிங்கப்பூரை அடையும்.