உள்ளூர் இழுவைப் படகுகளாலும் வாழ்வாதாரம் பாதிப்பு

உள்ளூர் இழுவைப் படகினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் யாழ்ப்பாண மாவட்ட காவல்துறையில் மகஜரொன்றை கையளித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு இன்று  சென்ற அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜோன் பொஸ்கோ, செயலாளர் வே.வின்சன் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் அ.அன்னராசா ஆகியோர் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுநதரனை சந்தித்து மகஜரை கையளித்தனர்.

அந்த மகஜரில் குருநகர் பகுதியை சேர்ந்த உள்ளூர் இழுவைமடி தொழிலாளர்களால்  உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.