இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும், இலங்கை பத்திரிகைப் பேரவையும் இணைந்து நடத்துகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதில், வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமாகிய பி. மாணிக்கவாசகம் அவர்களுக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு நேற்று (13.12.2022) கல்கிசை மவுண்ட் லவினியா விருந்தகத்தில் நடைபெற்றுள்ளது.
வீரகேசரி பத்திரிகையிலும், சர்வதேச ஊடகமான பி.பி.சி. தமிழிலும் நீண்டகாலம் ஆபத்தான ஒரு யுத்தப் பகுதியிலிந்து செய்தி சேகரிப்புப் பணியை துணிச்சலுடன் – திறம்படச் செய்துவந்தவா் ஊடகவியலாளா் பி.மாணிக்கவாசகம். வேறு சில சா்வதேச ஊடகங்களிலும் அவா் பணியாற்றியிருக்கின்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ் நாள் சாதனை விருதினைப் பெற்றிருக்கும் அவரது இந்த சமூகப் பணி மேலும் தொடரவும் அவருடன் குறித்த விருதினைக் பெற்றுக்கொண்ட மேலும் நான்கு ஊடகவியலாளர்களுக்கும் இலக்கு ஊடக நிறுவனம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.