‘நாடு நாசம் நாட்டைக் காப்போம்’- எதிர்க் கட்சியினரால் இன்று கொழும்பில் போராட்டம்

453 Views

நாடு நாசம் நாட்டைக் காப்போம்

நாடு நாசம் நாட்டைக் காப்போம்

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மைய காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகம், மக்களால் தாங்கிக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு, சர்வதேசத்தின் மத்தியில் நாடு சந்தித்துள்ள பாரிய பின்னடைவு உள்ளடங்கலாக தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளையும் முன்னிறுத்தி, அவற்றுக்குக் காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ‘முழு நாடும் அழிவில்: பொறுத்தது போதும், ஒன்றாய் அணிதிரளுங்கள்’ என்ற தொனிப் பொருளிலேயே இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் மாதம் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply