பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் முன்வைக்க அனுமதி

411 Views

download 7 1 பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் முன்வைக்க அனுமதி

பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் முன்வைக்க அனுமதி

பயங்கரவாதத் தடை (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சு சார் ஆலோசனைக் குழு இணங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குறித்த குழு கூடிய நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் வாரத்தில் இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply