கோட்டா – TNA சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

349 Views

கோட்டா - TNA சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

கோட்டா – TNA சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) மாலை 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெறுதவாக கோட்டாபய ராஜபக்ச தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சந்திப்பு இன்று இடம்பெறாது என ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி சந்திப்பு இடம்பெறும் என ஜனாதிபதி செயலாகத்தால், கூட்டமைப்பின் தலைமைக்கு இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சஜித் பிறேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதனாலேயே குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பை தவிர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுள் ஒன்றான ரெலோ இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply