ஆப்கானிஸ்தான்-“நாங்கள் ஆட்சி நடத்த இஸ்லாமிய சட்டமே போதும்“ -தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், தாங்கள் ஆட்சி நடத்த அரசியல் சாசனம் தேவையில்லை; இஸ்லாமிய சட்டமே போதும் என்று   அந்நாட்டு நீதித்துறை இணை அமைச்சர் அப்துல் கரீம் ஹைதர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், “இஸ்லாமிய நாடுகளில் புனித குரான் அடிப்படையில் அரசியல் சாசனங்களும் எழுதப்படுகின்றன. எங்களுக்கு தனியாக அரசியல் சாசனம் தேவையில்லை. இஸ்லாமிய சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதை நாங்கள் மக்களுக்கு தருகிறோம். பெண்கள் உரிமை பொறுத்தவரையிலும் இஸ்லாமிய சட்டப்படியே நாங்கள் அவர்களுக்கு சுதந்திரம் வழங்குகிறோம். நிலைமை சீரடையும்போது இன்னும் கூடுதலான அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்படும். நாங்கள் உருவாக்கும் சாசனம் அதன் அடிப்படையிலேயே அமையும்” என்றார்.