காஷ்மீர் பிரச்சினை- இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் -தலிபான்

காஷ்மீர் பிரச்சினை

காஷ்மீர் பிரச்சினை: இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தலிபான்கள் முதல் முறையாக பதிலளித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா கூறும்போது,

“ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களுக்கு ஏற்ப இந்தியா தனது கொள்கையை வகுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆப்கான் நிலத்தை வெளிநாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்விகாரத்தை  இந்தியா நேர்மறையாக அணுக வேண்டும்”என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply