ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் மீது கண்ணீர் புகை பிரயோகம்

262 Views

கொரோனா தொற்று காரணமாக ஜோர்தானில் வேலைவாய்பை இழந்த இலங்கையர்கள் குழுவினரினால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த அந்நாட்டு காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஜோர்தானின் அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் சேவையாற்றிய இலங்கையர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதோ இவ்வாறு கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 5 மாதங்களாக குறித்த இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்ததை அடுத்து அது தொடர்பில் விசாரணை செய்வதற்காக நேற்று (27) ஜோர்தானில் உள்ள இலங்கை தூதராக அதிகாரிகள் தொழில் பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது சுமார் 340 பேர் கொண்ட குழுவினர் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை அடுத்து அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply