யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கூட்டு அவசர கால பதில் அளிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பொறிமுறை (Joint Emergency Response Mechanism) அண்மையில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் இந்தத் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறைச்சாலைகளில் ஏற்படும் அவசர காலச் சூழ்நிலைகளைச் கையாளுவதற்கும், கைதிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் மட்டத்திலான அரசு நிறுவனங்களை ஒன்றிணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்



