ஜப்பான் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கைக்கு பயணம்

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜப்பானிய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்துவதற்கு அது தொடர்பில் ஆராய, ஜப்பானின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சுஷிதா ஷிம்பே, இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகள் மற்றும் அதற்குத் தேவையான புதிய முறைகள் குறித்து அவரது விஜயம் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவது உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ளன. சுஷிதா ஷிம்பே ஜப்பானிய இலங்கை பாராளுமன்ற நண்பர்கள் மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினராக மூன்றாவது முறையாக இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜப்பானின் வெளிநாட்டு உதவி நிறுவனமான ODA நிதியத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரும் 23ஆ ம் திகதி வரை அவர் இலங்கையில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.