திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த கோரி யாத்திரை ஆரம்பம்

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று ( சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.