அஜர்பைஜானின் பெய்லாகன் மாவட்டத்தின் பிரிஞ்சி ஷாசெவன் கிராமத்திற்கு அருகில் ஈரானுடனான எல்லையை கடக்க முயன்றவேளை இலங்கையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் அஜர்பைஜான் எல்லை காப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகள் தோஹா மற்றும் டுபாயில் இருந்து அஸர்பைஜானின் பாகு நகருக்கு வந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.