எரிபொருள் தட்டுப்பாட்டினால் யாழ். குடாநாட்டில் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு

157 Views

யாழ். குடாநாட்டில் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு

தற்போது இலங்கையில் நிலவிலரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாழ். குடாநாட்டில் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

எரிபொருட்களின் அதிகரித்த விலையேற்றம் ஒருபக்கம் பல்வேறு வகைகளில் செலவீனங்களை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையும் யாழ். குடாநாட்டு விவசாயிகளை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

யாழ். குடாநாட்டில் தற்போது சின்ன வெங்காயம், புகையிலை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்காலத்தை அண்மித்துள்ளன. கடுமையான வெப்பம்   காரணமாக நீர் இறைப்பு என்பது மிக மிக அத்தியாசியமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் நீர் இறைப்பு இயந்திரங்களுக்கான மண்ணென்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்ணென்ணெய் விநியோகிக்கப்படும் நேரத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படுகிறது. அதுவும் நீண்ட வரிசையில் நின்றே அதனை பெற்றுக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply