சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

210 Views

சிரியாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்து. 

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில்; இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிரிய அரச செய்திச் சேவையான சனா (SANA) செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலில் சிரிய சிப்பாய் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்தனர் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊள்ளூர் நேரப்படி இன்று காலை 2.00 மணியளவில் இத்தாக்குல் நடத்தப்பட்டாக அச்செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் காரணமாக மேற்படி மேற்படி விமான நிலைய ச‍ேவைகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply