2023 இல் பொறுப்புகளில் இருந்து யாரும் தட்டிக்கழிக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

2023ஆம் ஆண்டு நாட்டிற்கான தமது பொறுப்புகளில் இருந்து எந்தவொரு தனிநபரும் தட்டிக்கழிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு இது ஒரு முக்கியமான ஆண்டாக இருப்பதால் பொறுப்புகளில் இருந்து யாரும் தட்டிக்கழிக்க முடியாது.

புத்தாண்டில் வளமான இலங்கைக்காக அனைத்து அரச ஊழியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.