ஆப்கன்  மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

173 Views

மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்

ஆப்கான் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு.

ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இத்தாக்குதலுக்குப் பின் தாங்கள் இருப்பதாக இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பு கூறியுள்ளது.

மேலும், அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் கந்தகார் மசூதி குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad ஆப்கன்  மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

Leave a Reply