ஈரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்

ஈரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஈரானிய செய்தி ஊடகமான மெஹர் வழங்கும் தகவலின்படி, நிபுணர்களின் சபை தலைமை செயலகத்தின் தலைவரான ஹுசைனி புஷெஹ்ரி தான் இந்த முடிவை பொதுவெளியில் அறிவிப்பதற்கு பொறுப்பானவர்.

முன்னாள் அதிஉயர் தலைவர் காமனெயி மறைவுக்குப் பிறகு புதிய தலைவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் புதிதாக எந்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை இலக்கு வைப்போம் என இஸ்ரேல்  அறிவித்துள்ளது.