இலங்கைக்கு அருகில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 104 பேர் பலி: ஈரான் அறிவிப்பு

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது.

இந்தநிலையில் கப்பலில் இருந்த 32 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.