இலங்கை அகதி வீட்டின் கதவைத் தட்டியதாக புகாா்: கடலோரக் காவல் படை வீரரிடம் விசாரணை

இராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கை அகதி வீட்டின் கதவைத் தட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கடலோரக் காவல் படை உறுப்பினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகின்றது.

மண்டபம் கடலோரக் காவல் படை வீரராக இருப்பவா் அன்பு (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

நள்ளிரவில் அப்பகுதியில் இருந்த இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்ற அன்பு, டியூரி என்பவரது வீட்டின் கதவைத் தட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்திலிருந்தவா்கள் வந்து அன்புவை பிடித்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவத்தின் போது அன்பு போதையில் இருந்ததாகவும்  கூறப்பட்டதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  இதையடுத்து அவரிடம்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Tamil News