ஆசிரியர்களின் போராட்டத்திற்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை ஆதரவு

IMG 5199 ஆசிரியர்களின் போராட்டத்திற்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை ஆதரவு

சர்வதேச இந்து இளைஞர் பேரவை, ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெறுகின்ற சம்பள முரண்பாடுகள் மற்றும் அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாட்டில் பல இடங்களிலும் ஆசியர் சங்கங்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே அவர்களின் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவு உண்டு என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்களால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்ள அனைத்து துறைகளையும் சார்ந்த அத்தனை அதிகாரிகளையும், அறிஞர்களையும் உருவாக்கியவர்கள் இவ்வாசிரியர்களே. எனவே அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கின்றது.

ஆதரவு நல்க வேண்டியது எமது ஒவ்வொருவர்களின் கடமையுமாகும். சமூகத்திலே பார்வையாளர்களாகவே மட்டும் இருப்பதால் எதுவும் கிடைக்கப் போவதில்லை. பங்காளர்களாக மாறுங்கள். பார்வையாளர்களாக சமூகத்தில் இருக்கும் வரை நாம் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது பங்காளர்களாக மாறும் போது நாம் எமக்கான தேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இன்று ஆசிரியர்கள் தமக்காக மட்டுமல்ல அனைத்து துறை சார்ந்தவர்களுக்குமாகவே போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆக அவர்களின் போராட்டம் என்ன காரணங்களுக்காக முன்னெடுக்கப் படுகிறதோ அந்த இலக்கினை அவர்கள் அடைய வேண்டும்.

அதுவரை அவர்களிற்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவை அனைவருக்கும் உண்டு. எனவே அவர்கள் போராட்டம் வெற்றி பெறும்வரை எமது ஆதரவுகள் அவர்களுக்கு தொடர்வதோடு எம்குரல் அவர்களுக்காக சேர்ந்து ஒலிக்கும் என்று உள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021