மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திரைநீக்கம்

94 Views

inscriptions 6 மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திரைநீக்கம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நேற்று திங்கட்கிழமை  மாலை முதல் மக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது.

34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் நேற்று முதல் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை  பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் பண்டிதரின் தாயாரால்  சுடர் ஏற்றப்பட்டது. அதனைத்  தொடர்ந்து பெயர் கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply