ரோஹிங்கியா அகதிகளை நிராகரித்து, படகை மலேசியா நோக்கி அனுப்பிய இந்தோனேசியா

ரோஹிங்கியா அகதிகளை நிராகரித்து

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாண கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்கு தஞ்சம் வழங்க இந்தோனேசிய அரசு மறுத்துள்ளது.

இதையடுத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அகதிகளைக் கொண்ட படகை மலேசியாவை நோக்கி இந்தோனேசிய படையினர் அனுப்பியிருக்கின்றனர்.

ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா. மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் விடுத்த கோரிக்கையினை இந்தோனேசிய அரசு நிராகரித்துள்ளது. அகதிகளுக்கு உடைகள், எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் படகை பழுதுப் பார்த்து கொடுத்துள்ள இந்தோனேசிய அரசு அவர்களை இந்தோனேசிய கடல் பகுதியிலிருந்து வெளியேற்றி இருக்கிறது. ரோஹிங்கியா அகதிகளை நிராகரித்து, படகை மலேசியா நோக்கி அனுப்பியது.