இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

375 Views

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

மியன்மாரில் கைது செய்யப்பட்ட 07 இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 15 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள், கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மியன்மாரில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மியன்மாரின் தற்போதைய இராணுவ ஆட்சியாளர்கள், நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தி வருவதாக   கடற்றொழில் திணைக்களம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை மீனவர்களை மீட்பதற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply