இலங்கை மற்றும் திபெத்திலிருந்து வந்த அகதிகளைப் பாதுகாக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள்: ஐ.நா. பாராட்டு

360 Views

இந்தியாவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. துணை ஆணையாளர் கிலியன் ட்ரிக்ஸ்(Gillian Triggs) டெல்லியில் உள்ள தேசிய காந்தியடிகள் அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய அவர்,

“சொந்த நாடுகளில் வாழ முடியாமல் அண்டை நாடுகளில் தஞ்சமடையவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அகதிகள், கௌரவத்துடன் நடத்தப்படவேண்டும்.

நான் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளதற்கான காரணங்களில் ஒன்று, இந்த நாடு அகதிகளுக்கு பல நூற்றாண்டு காலமாக அடைக்கலம் அளித்து வருவதாகும்.

அகதிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் இந்தியாவுக்கு நீண்ட கால வரலாறு உண்டு.

 இலங்கை மற்றும் திபெத்திலிருந்து வந்த அகதிகளைப் பாதுகாப்பதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை” என்றாா்.

Tamil News

Leave a Reply