பாராளுமன்றுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

“அரச தலைவருக்குள்ள அதிகாரங்களை முழுமையாக அகற்றி, ஜனநாயக உரிமைகளை பாராளுமன்றுக்கு வழங்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பிரதான கோரிக்கை” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்  அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் நாளை  நாடளாவிய ரீதியில் நடைபெற உள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு பெருந்தோட்ட மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரம் இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்களில் ஒருவரான பழனி திகாம்பரம், இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply