தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது -அமெரிக்க தூதுவர்

தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்த பின்னர் தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் மனதை வருத்தும் அனுபவத்தை நான் நேரடியாக கேட்டறிந்தேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Tamil News