மத்திய கிழக்கில் இந்திய கப்பல் தாக்கி மூழ்கடிப்பு

ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 14) அன்று கண்டனம் தெரிவித்துள்ளது, இது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பு முகமைகளும் இந்தியாவும் இந்த சரக்குக் கப்பல் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளன. புதன்கிழமை அதிகாலை நடந்த இந்தத் தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை இந்திய அரசு வழங்கவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சகம் கப்பலின் பெயரை வெளியிடவில்லை மற்றும் கப்பல் மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் அந்த கப்பலின் பெயர் ‘ஹாஜி அலி’ (Haji Ali) என்று கூறியுள்ளது.