நதிகள் மாசுபடுவதால் பெருமளவில் இறக்கும் இந்திய மக்கள்

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இராசாயணக் கழிவுகள் நதிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை மாசுபடுத்துவதால் அங்கு பெருமளவான மக்கள் புற்றுநோய், தோல் நோய்கள் மற்றும் பல்வேறு வகையான உடல்நலக் குறைபாடுகளால் இறந்து வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள ஹங்நெலி என்ற 5,000 மக்களை கொண்ட கிராமத்தில் 30 விகிதமான இளைஞர்கள் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குவாழும் மக்கள் நிலத்தடி நீரை பருகுவதால் தினமும் நோய்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எல்லா வீடுகளிலும் நோயாளிகள் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளார் சரென்டர் ரதி. 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் அண்டு வரையிலும் எமது கிராமத்தில் 71 பேர் புற்றுநோயினால் இறந்துள்ளனர்.

எனது மகன் விகாஸ் ஆரோக்கியமாக பிறந்த குழந்தை ஆனால் அங்குள்ள நீரை குடித்து வளர்ந்ததால் இன்று எலும்புகள் சிதைவடைந்து நோயாளியாக மாறியுள்ளார். எனது வருமானம் முழுவதும் அவரின் மருத்துவ செலுவுக்கே போதுமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கங்கா, யமுனா, கிருஸ்ணா உட்பட பெருமளவான நதிகள் மாசடைந்துள்ளன. அதனால் விவசாயநிலங்களும் பாதிப்படைந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டும்150 இற்கு மேற்பட்ட மக்கள் புற்றுநோய் உட்பட பல நோயிகளினால் இறந்துள்னர். ஏனைய கிராமங்களை நீங்கள் கற்பனை செய்து பார்த்தால் நிலமை விபரீதமானது. அதாவது எதிர்காலச் சந்ததி முற்றாக அழிக்கப்படுகின்றது.

அங்குள்ள நீரில் ஈயம், கட்மியம், ஆர்சனிக், அயன், நிக்கல், மேக்கூரி போன்ற நட்சுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக உள்ளன. இந்த இராசாயணப் பொருட்கள் ஒரு லீற்றர் நீரில் 200 மி.கி அளவில் இருக்க வேண்டும் ஆனால் அங்குள்ள நீரில் அது 7500 மி.கி அளவில் உள்ளது.

கடந்த 4 வருடங்களில் அங்குள்ள230 நிறுவனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டை மீறியதற்காக 1.4 மில்லியன் டொலர்கள் அறவிடப்பட்டபோதும், தொடர்ந்து பல நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறிவருவதுடன், பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது ஆபத்தான உற்பத்தி பொருட்களின் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு நகர்த்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.