இந்திய இராணுவத் தளபதி எதிர்வரும் 12ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவன ஐந்துநாள் பயணமொன்றை மேற்கொண்டு 12 ம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவதளபதியின் பயணம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதி பிரதமர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.