திருகோணமலை-திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கு இந்தியா உதவும்-இந்திய தூதுவர்

148 Views

எதிர்காலத்தில் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடையவளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு பயணம் செய்து பூசை வழிபாட்டில் கலந்து கொண்டதுடன் ஆலய நிர்வாக பணிகளையும் பார்வையிட்டார்.

இதனையடுத்து “இன்றைய நாள் ஒரு விசேட நாள். நவராத்திரி காலம் விரதம் அனுஷ்டிக்கப்படுகிற அதே காலத்தில் காந்தி ஜெயந்தி நடைபெறுகின்ற இன்றைய நாளில் இந்த இடத்துக்கு நான் விஜயம் செய்து பூஜை வழிபாடுகளிலும் மிக நேர்த்தியாக நான் கலந்து கொண்டது மாத்திரமல்ல இந்த ஆலயத்தினுடைய தொன்மையான வரலாறு பூர்வீகமான விடயங்கள் அனைத்தையும் அறிஞர்களும் ஆலய நிர்வாகிகளும் எனக்கு நிறைந்த தெளிவுடன் அறிய தந்தனர்“என்றார்.

Leave a Reply