ரஸ்யாவுடன் இரு தரப்பு வர்த்தகத்தை நிலைப்படுத்த இந்தியா விருப்பம்

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது. ரஸ்யாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் பசளைகளின் வர்த்தகம் 27 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

எனினும் இந்தியாவில் இருந்து ரஸ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வர்த்தகம் 2 பில்லியன் டொலர்களையே எட்டியுள்ளது. எனவே எதிர்காலத்தில் அதனை மேம்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக ரஸ்யாவுக்கான இந்திய தூதுவர் பவன் கபூர் கடந்த வியாழக்கிழமை (22) தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவுக்கு தற்போது பல பொருட்கள் தேவையாக உள்ளது. வாகன உதிரிப்பாகங்கள், மருந்து பொருட்கள்> விவசாயப் பொருட்கள் மற்றும் இரசாயணப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் வர்த்தகர்களை நாம் ஊக்கப்படுத்தி வருகின்றோம். இரு தரப்பும் அவர்களின் தேசிய பணத்தில் தான் பரிமாற்றங்களை செய்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேற்குலக நாடுகள் கைவிட்டு சென்ற வர்த்தக நிறுவனங்களில் பெருமளவானவற்றை ரஸ்யா சீனாவுக்கு வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.