ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக இந்தியா உறுதி- தலிபான்கள் 

198 Views

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவி


ரஷ்யா தலைமையில் 10 நாடுகள் பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக இந்தியா உறுதி வழங்கியுள்ளது. 

இக்கூட்டத்தில் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை பிற நாடுகள் வெளிப்படுத்தின.

இந்நிலையில், இந்திய பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா கூறும்போது, “பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும் ஆப்கானிஸ்தான் மனிதாபிமான நெருக்கடியில் இருப்பதால் உதவிகளை அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக இந்தியா உறுதி- தலிபான்கள் 

Leave a Reply