மீனவர்களின் பாதுகாப்பு விடயத்தில் சொந்த நாடு அமைதியாயிருக்க இந்தியா எமக்கு உறுதி தருகிறது! சபையில் கஜேந்திரகுமார் எம். பி.



சொந்த நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு விடயத்தில் உத்தரவாதப்படுத்த வேண்டிய இலங்கை அரசு எந்த உத்தர வாதமோ வாக்குறுதியோ வழங்கா திருக்க, வடக்கு மீனவர்களின் பிரச்னைகள் குறித்து இந்தியா நேரடியாக எமக்கு உறுதிமொழி வழங்குகின்றது. எனவே, எமது மீனவர்களின் அழிவுக்கு இலங்கை கடற்படை யும் இலங்கை அரசுமே பொறுப்புக்கூற வேண்டும், என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன் னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற் றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறி னார். வடக்கு மாகாண மீனவர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது கடற் பரப்பிற்கு அப்பால் உள்ள மக்கள் எமது எல்லைக்குள் வருவதுடன் சட்டவிரோத மீன்பிடியில் சட்டவிரோத மீன்பிடியில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தி லும் முறையிட்டுள்ளோம்.

தமிழர்களின் காணிகளை அபகரித்து ஓர் ஆக்கிரமிப்பு படையாக இங்கே இருக்கின்ற இலங்கை கடற்படை, தமிழ் மீனவர்கள் மீதான இந்த அத்துமீறல் களை அனுமதிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கு மீனவ சமூகத்தை மேலும் மேலும் வறுமைபடுத்தி அவர்களை இந்த பகுதியில் இருந்து தாமாகவே வெளியேறப் பண்ணும் ஓர் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலாகவே நான் இதை பார்க்கிறேன்.

அரசின் இந்த பாராமுகம் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமே . இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து நாம் கொண்டுவரவிருந்த ஒத்தி வைப்பு பிரேரணையை ஒத்திவைக்கு மாறும் தாம் இந்த விடயம் குறித்து உடனடியாக காத்திரமான நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய தூதரகம் எமக்கு அறியத் தந்திருக்கிறது.

இதேவேளை , இந்தவிடயத்தில் உண்மையில் சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதப்படுத்த வேண்டிய இலங்கை அரசு ஒன்றுமே செய்யாதிருக்க, வெளி நாடு ஒன்று இந்த விடயத்தில் உத்தரவா தம் தரவேண்டிய நிலைமை இங்கு நிலவுகிறது என்றார்.

Tamil News