அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: இலங்கைக்கு நிதியுதவியை அறிவித்துள்ள அவுஸ்திரேலியா

390 Views

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கையர்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டுக்கு 50 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதியுதவி இலட்சக்கணக்கான இலங்கையர்களின் தினசரி உணவு மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் இலங்கையர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் இலங்கைக்குப் பயணமாகியுள்ளார். இந்த சூழலில், பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நிதியுதவியை இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply