பொருளாதார நெருக்கடி- வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்க நடமாடும் விற்பனை சேவை

விவாய திணைக்களத்தின் விதைகள்

வவுனியாவில் விவாய திணைக்களத்தின் விதைகள் நடுகல் பிரிவினரால்  நடமாடும் விற்பனை சேவை ஒன்று இன்றையதினம்   முன்னெடுக்கப் பட்டிருந்தது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தினை கருத்திற் கொண்டு பொதுமக்களை வீட்டுதோட்டம் செய்ய ஊக்குவிக்கும் நோக்கோடு மரக்கறி பயிர்விதைகள் அடங்கிய  பொதிகள் மற்றும் நாற்றுக்கள் கொண்ட நடமாடும் விற்பனை சேவை ஒன்று வவுனியா விவாசாய திணைக்களத்தின் விதைகள் நடுகல் பிரிவினரால் வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தின்  தேவை கருதிய குறித்த சேவையில்  வீட்டு தோட்டத்திற்கு தேவையான மரக்கறி விதைகள், நாற்றுக்கள் மற்றும் மேட்டு நில பயிர்களான பயறு, கௌப்பி , குரக்கன் போன்ற விதைகள், பழப்பயிர்கள் என்பன நடமாடும் சேவையிலே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மரக்கறி விதைகள்  பொதிகளாகவும், நாற்றுக்களாகவும்  வெவ்வேறு வகையிலே விற்பனை செய்யப்படுவதையும் அதிக மக்கள் வாங்குவதனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

Tamil News