இலங்கை: மருந்துகள் மருத்துவ உபகரணங்களைப் பெறமுடியாத நிலை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மருத்துவ உபகரணங்களைப் பெறமுடியாத நிலை

இலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார அமைச்சின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லாததன் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் மருத்துவ உபகரணங்களைப் பெறமுடியாத நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவி வழங்குபவர்கள் மத்தியில் அரசாங்கம் குறித்தும் சுகாதார அமைச்சு குறித்தும் நம்பிக்கை இல்லாததால் மருந்துகள் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுயாதீன பொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆபத்தான நோய்களிற்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்துகள் -சிறிய தொற்றுநோய்களிற்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்துகள் உட்பட நோயாளிகளுக்கு வழங்கப்படும் 237 அத்தியாவசிய மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது. மருந்துகள் பற்றாக்குறையால் அரசதனியார் மருத்துமனைகள் மருந்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவிவழங்குபவர்கள் பலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அவர்கள் அரசாங்கத்தின் மீதோ சுகாதார அமைச்சின் மீதோ நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Tamil News