சுதந்திரக் கட்சியை பழைய நிலைக்குக் கொண்டுவர காலம் எடுக்கும் – சந்திரிகா

“நான் எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காகவே பணியாற்றுகிறேன். கட்சியை உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. நீண்ட காலம் எடுக்கும்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தமது நிலைப்பாட்டை வெளியிப்படுத்தியிருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சந்திரிக்கா, “நாட்டுக்காக அரசியல் செய்வர்கள் நாம்.தற்போதுள்ள அரசியல்வாதிகளுடன் எனக்கு அரசியல் செய்ய முடியாது. கட்சியின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னை கோரினார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெடுப்ப என்னால் முடியும் நான் ஆதரவு வழங்குவேன் அவ்வளவுதான். ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவி புரியவே சந்திரிக்கா வந்துள்ளார் என தற்போது பெரிய பொய்யொன்றை கூறுகின்றனர். எனக்கு அப்படி எந்தவொரு ஆசையும் இல்லை.

நான் எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காகவே பணியாற்றுகிறேன். கட்சியை உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. நீண்ட காலம் எடுக்கும்” என்று தெரிவித்தாா்.