‘கோட்டா அரசே வீட்டுக்கு போ’ – கொட்டும் மழையிலும் 4வது நாளாகவும் தொடரும் போராட்டம்

கோட்டா அரசே வீட்டுக்கு போ

கோட்டா அரசே வீட்டுக்கு போ

இலங்கை சந்தித்துள்ள வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்சவையும் அவரது தலைமையிலான அரசாங்கத்தையும் பதவி விலக வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் இன்று (12) நான்காவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

காலி முகத்திடல் பகுதியில் தற்காலிக கூடாரங்களை அமைந்து அங்கேயே தங்கி  இளைஞர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அதிகளவானோர்  காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடி தமது எதிர்ப்பினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோட்டா அரசே வீட்டுக்கு போ

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்துள்ள இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து போராடிவரும் இளைஞர்களுக்கு ஆதரவாக  நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருமளவான மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.